செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலத்தில் ஊழியர்களு க்கான இணைய தள பயிற்சி நடந்தது.
சென்னை மறைமலை நகர் ஊரக வளர்ச்சி துறை , அரசு பயிற்சி மையம் மூலம் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பணியாளர்களு க்கும் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் உடல் மற்றும் மனம் சார்ந்த , நல்வாழ்வு தொடர்ப்பாக புத்துணர்ச்சி வழங்கப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உள்பட ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.