செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கருங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கிடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் ஸ்டிபன் ரத்தினகுமார் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, கருங்குளம் அரசு மருத்துவர் பன்னீர் செல்வம், வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி உள்பட பலர் பேசினர். உதவியாளர் ராமசந்திரன் நன்றி கூறினார்.