செய்துங்கநல்லூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் அண்ணா திடலில் அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா முன்னிலைவகித்தார். ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாநில மருத்துவ அணி கிளை செயலாளர் கோசல்ராம், அவை தலைவர் பிள்ளைமுத்து, ஊராட்சி கழக செயலாளர் திருவரங்கம், குருநாதன், ராஜா, தர்மராஜ், மாவட்ட கிளை செயலாளர் மருத விநாயகம், வல்லநாடு கிளை செயலாளர் ராமையா, அனவரதநல்லூர் கிளை செயயாளர் ஐயப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.