செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். ஒன்றிய இணைச்செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் செந்தாமரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உதயசங்கர், அய்யம்பெருமாள், காசி, விஜய உடையார், நயினார், முருகேசன், ஊராட்சி செயலாளர்கள் அண்ணாமலை, கள்ளவாண்டன், ஒன்றிய பாசறை செயலாளர் கதிரேசன், பூ திருவரங்கம், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.