செய்துங்கநல்லூரில் கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன் எழுதிய நதிக்கரை ஊற்று என்னும் கவிதை நூல் வெளியிட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்து நூலை வெளியிட்டார். அரசுபோக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஓட்டுனர் செல்வ அந்தோணி நூலை பெற்றுக்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் வட்ட அரசு ஊழியர் சங்க பொருளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். பொன்சொர்ணா பதிப்பக உரிமையாளர் அபிஷ்விக்னேஷ் வரவேற்றார். முறப்பநாடு சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.
கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பார்வதி, ,ஊரக வளர்ச்சி துணை மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஸ்ரீவைகுண்டம் வட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் சீனிவாசன், நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, தொழிலதிபர் டேவிட், சத்துணவு ஊழியர் சங்கத்தினை சேர்ந்த காசிமணி, வேல் முருகன், உமா, பண்டாரம் , அன்னமரியாள், தஸ்நேவிஸ் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
நூலாசிரியர் கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டி ஏற்புரையாற்றினார்.