செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தெற்க்கூரை சேர்ந்தவர் முருகேசன் (65). இவர் மனைவி வள்ளியம்மாள். இவருக்கு ஒரே ஒரு மகள் மகரஜோதி(16). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11 வது வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் ரேடியோ செட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 12 நாளுக்கு முன் பள்ளிக்கு சென்று வந்த தனது மகள் சோர்வாக வருவதைகண்டு, விசாரித்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. உடனே அவர் பாளை அரசு மருத்துவ மனையில் தன் மகளை கொண்டு சேர்த்தார். தொடர்ந்து 12 நாள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் மகரஜோதி இறந்து விட்டாள். இவரது உடல் அடக்கம் முத்தாலங்குறிச்சியில் நடந்தது. ஒரே மகள் மர்ம காய்ச்சலுக்கு பலியானதால் ஊரே சோகத்தில் முழ்கி கிடக்கிறது.
இதற்கிடையில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் இருந்த பணியாளர்கள் தொடர்ந்து முத்தாலங்குறிச்சியில் மர்ம காய்ச்சல், டெங்கு உள்பட காய்ச்சல் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சிவராமன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரபப்பை ஏற்படுத்டதியுள்ளது.