தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டியது கீழடி. கீழடி நாகரீகத்தினை ஆய்வு செய்து அதன் அறிக்கையை துல்லியமாக வெளியிட்டது மாநில் அரசு. இதற்காக மாநில அரசுக்கும் அமைச்சர் ம.பாண்டியராஜன் அவர்களுக்கும் , இயக்குனர் உதயசந்திரனுக்கும் பாராட்டு குவிந்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ மாணவிகள் கீழடியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை மாணவிகள் 48 பேர் அடங்கிய குழுவினர் கீழடி வந்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் வந்த இந்த குழுவில் தமிழ்துறை பேராசிரியர்கள் ஏஞ்சல் லதா, சத்தியபாமா, கல்பனா தேவி, ஹெலன், மாரித்தங்கம், செல்வி ஆகியோர் இருந்தனர். கீழடியில் காப்பாட்சியர் ஆசைதம்பி, கண்காணிப்பாளர் ரமேஷ் மாணவிகளுக்கு ஆய்வு நடந்த இடத்தினை காட்டி விளக்கம் அளித்தார். முன்னதாக இவர்கள் மதுரை காந்தி மியூசியம் மற்றும் அரசு அருங்காட்சியத்தனை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வாசுகி, தமிழ்துறை தலைவர் அருணாஜோதி ஆகியோர்செய்திருந்தனர்.
&&&