007. பழமைகளைப் போற்று நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி
பெரும்பாலுமே சில அரசு அலுவலர்கள் அந்த பதவியிலிருந்தால்தான் பதவிக்கே சிறப்பு. அதுபோன்ற ஒரு அரசு பதவியை அலங்கரிப்பவர்தான் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி. பெரும்பாலுமே தமிழர்களின் பெருமைக்குப் பொற்காலம் என்று இந்த காலகட்டத்தினை கூறலாம். ஆகவே தான் தமிழனின் தொன்மை ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொற்கை எனப் பறை சாற்றப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் நெல்லை அருங்காட்சியகத்தினை மிகச்சிறப்பான முறையில் வழிநடத்தி, அருங்காட்சியகம் இருக்கிறது என திருநெல்வேலி மக்களுக்கு எடுத்துரைத்தவர் சகோதரி சிவசத்திய வள்ளிதான். இரண்டு ஆண்டு கொரோனா காலம். இந்த காலத்திலும் கூட இணையவழி கருத்தரங்கு மூலமாக பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வருகிறார். கல்லூரி மாணவ, மாணவிகளை ஒருங்கிணைப்பது, தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைப்பது. நிகழ்ச்சிகளை அருங்காட்சியகத்தில் நடத்துவது. அரசின் ஓதுக்கீடுகளை கவனத்துடன் பெற்றுக் கொள்வது. நமது அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அய்யாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் விளங்குவது எனச் சகோதரி சிவசத்திய வள்ளி மிளிர்கிறார். நெல்லை அருங்காட்சியகத்தினை மிளிரச் செய்கிறார். இன்று நெல்லை தினவிழா. மாலை 6 மணிக்கு நெல்லை அருங்காட்சியகத்தில்தான் நடைபெறுகிறது. சென்னை வாழ் நெல்லை மக்கள் நலசங்கத்துடன் இணைந்து நடத்துகிறார்கள். நானும் நாறும்பூ அய்யாவும் உரையாற்ற இருக்கிறோம். வாருங்கள் நேரில் சந்திப்போம். அரசு அதிகாரி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் சகோதரி சிவசத்திய வள்ளிக்கு வாழத்துகள். . அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


