செய்துங்கநல்லூர் மே 5
செய்துங்கநல்லூரில் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் , கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் சந்தைக்கு வந்தவர்களிடம் சமூக இடைவெளி விட்டு கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டும், முக கவசம் அணிந்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக சேவகர் கண்ணன், கிராம உதயம் தன்னார்வ தொண்டர் சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம் செய்திருந்தது.