பண்டாரவிளையில் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்த அரசர்குளம் கிராமத்து இளைஞர்கள். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தில் தனியாக ரேசன் கடை கேட்டு அந்த பகுதி மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் அதன் பயனாக கிராமங்களில் நடமாடும் ரேசன்கடையை மாநில அரசு அறிவித்தது. இதனையடுத்து அரசர்குளம் கிராமத்திற்கு ரேசன் கடை வந்தது. அதே போல் அரசர்குளம் கிராமத்தில் நூலகம் கட்டுவதற்கான பணிகள் நடந்தது. அதில் ஒரு சில பிரச்சனைகளால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் நூலக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரசர்குளம் இளைஞர்கள் செல்வகுமார் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரின் சொந்த ஊரான பண்டாரவிளைக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதனுக்கு பொன்னா¬டை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அகஸ்டின், முனியாண்டி, ராமகிருஷ்ணன், செந்தில், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


