தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு சிவகளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் தமிழுக்கு சிறப்பாக தொண்டாற்றியமைக்காக மாவட்டத்திற்கு ஒரு நபருக்கு தமிழக அரசால் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படும்.
2020 ஆம் ஆண்டிற்கான தூத்துக்குடி மாவட்டத்திற்க்கான விருதை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு கடந்த 1ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை நேற்றைய தினம் ஆசிரியர் சிவகளை மாணிக்கம் தலைமையில் பொன்னாடை போர்த்தி வரவேற்று கௌரவப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


