செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாராட்டு விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப் இன்ஸ்பெக்டர் பைசல், சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் தலைமை காவலர்கள் சிவனாந்தம், இசக்கி ராஜா, ச்ற்குணம், சுடலைகண்ணு முத்துகனி, காவலர்கள் நயினார் செல்வக்குமார், தனிப்பிரிவு ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


