மாற்று திறனாளி வாக்களிக்க புதிய ஆப் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று திறனாளி செயலி விழிப்புணர்வு படத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் வெளியிட்டார். மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, படத்தின் இயக்குனர் அபிஷ்விக்னேஷ், இசையமைப்பாளர் இசக்கியப்பன், கிராம உதயம் ஆழ்வார் தோப்பு மேலாளர் வேல்முருகன், அனவரதநல்லூர் மாற்றுதிறனாளி ஹோம் வார்டன் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த படத்தில் மாற்றுதிறனாளிகள் அரசு அறிமுகப்படுத்தி உள்ள பி.டபுள்.யூ ஆப் மூலம் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து விளக்குகிறது. இந்த படத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் கி செந்தில் ராஜ் வழிகாட்டுதலில் பொன்சொர்ணா ஸ்டுடியோ தாயரித்திருந்தது. இந்த படம் மீடியா கிறுக்கன் யூ டியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.


