கோபாலசமுத்திரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக பசுமை பொங்கல் தின விழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் வழங்குதல் நடுதல் மற்றும் பராமரித்தல் விழா நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர்.சுந்தரேசன் தலைமை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் நடும் நிகழ்வை இயககுனர் துவக்கி வைத்தார். அதன்பின் பசுமை பொங்கல் குறித்து சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், சசிகலா, கார்த்திக், சேகர், கணேசன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஆரோக்கிய மிக்கேல் ஜீவா நன்றி கூறினார்.
இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கிராம உதயம் மையத்தலைவர்கள் குழுத்தலைவர்கள் கிராம உதயம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது இன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.


