சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக்கவேண்டும்
செய்துங்கநல்லூரில்
சத்துணவு மாநாட்டில் தீர்மானம்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்று செய்துங்கநல்லூரில் நடந்த சத்துணவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது-
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கருங்குளம் வட்டாரம் சார்பில் 13 வது வட்டார மாநாடு நடந்தது. செய்துங்கநல்லூர் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வளாகம் எம்.ஆர். அப்பன் அரங்கத்தில் நடந்த மாநாட்டுக்கு வட்டார தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார இணை செயலாளர் தஸ்நேவிஸ் வரவேற்றார் மாவட்ட துணை தலைவர் சோ. மகேந்திரபிரபு துவக்கவுரையாற்றினார். வட்டார துணை தலைவர் அனிதா செயலர் அறிக்கையை வாசித்தார். வட்டார பொருளாளர் பண்டாரம் பொருளாளர் அறிக்கையை வாசித்தார். தீர்மானத்தை வட்டார துணை தலைவர் முருகன், வட்டார இணை செயலாளர் அன்னமரியாள் ஆகியோர் தீர்மானத்தினை முன்மொழிந்தனர். நில அளவை மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுல்தான் அலாவுதீன் , வட்டார செயல் ஸ்டீபன் ரத்தினகுமார், மாவட்ட துணைத் தலைவர் வேல் முருகன் ஆகியோர் வாழத்துரை வழங்கினர். மாவட்ட தலைவர் பாக்கியசீலி மாவட்ட செயலர் பொன்சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் சத்துணைவு ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்பட 8 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக சீனிவாசன், துணை தலைவராக இராஜேந்திரன, பாப்பு, பார்வதி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக உமாபகவதி யும் இணைசெயலாளராக முருகன்அனிதா தஸ்நேவிஸ் ஆகியோரும், பொருளாளராக பண்டாரம், செயற்குழு உறுப்பனிராக இந்திரா அன்னமரியாள் ஆகியோரும் தணிக்கையாளராக மாதவராணியும் தேர்ந்தெடுககப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பாராட்டினர். அன்னமரியாள் நன்றி கூறினார்.
&&&¬
&&


