செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நான்காவது தேசிய சித்தர் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ செல்வி தலைமை வகித்தார்.வல்லநாடு சித்த மருத்துவர் டாக்டர் செல்வகுமார் வரவேற்றார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தளார் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் ஆர்.சி.பங்குதந்தை ஜாக்சன்.எம்.அருள், புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை ரமணிபாய் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சித்த மருத்துவ விழிப்புணர்வு பற்றி மருத்துவர் ரதி செல்வம், கொரனா வைரஸ் தொற்றும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் மருத்துவர் ஜன்னத் ஷெரிப், சித்த மருத்துவத்தில் தவறான புரிதலும் அதற்கான சரியான விளக்கமும் என்ற தலைப்பில் மருத்துவர் முருகபொற்ச்செல்வி மற்றும் மருத்துவர் அபிநயா ஆகியோர் உரையாற்றினார். நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களால் குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது. செய்துங்கநல்லூர் நூலகத்திற்கு மூலிகைக்கன்றுகள் வழங்கப்பட்டன, அதை வாசகர்வட்ட தலைவர் திருமலை நம்பி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்று கொண்டனர். மூலிகை மற்றும் உணவுப்பொருள் கண்காட்சியை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திறந்து வைத்தார். கண்காட்சியில் நவதானியங்கள் கோலம், மனிதனின் உடல் கூறுகளின் நோயை தீர்க்கும் மூலிகைகளை கொண்டு உடல் உறுப்புகளை வரைந்திருந்தது, கொரானா விழிப்புணர்வு பாதகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறப்பாக இருந்தது. , கொரானா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காத்த சித்த மருத்துவத்திற்கு ஆதரவாக அனைவரும் கையெழுத்து பலகையில் கையப்பமிட்டனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்துணவு தானியங்கள், நிலவேம்பு குடிநீர், மூலிகை தேனீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் ரவீந்திரன், மருத்துவர் சுப்பையா பாண்டி ,சுகாதார ஆய்வாளர் சண்முகம் பெருமாள் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
&&&


