திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஆறாம் பண்ணை ஊராட்சியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது.
அதிமுகவை நிராகரிப்போம் எனும் தீர்மானத்தை ஆதரிக்கும் விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டனர்
கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை வகித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சிக்கு அபுசாலி, இமாம் அலி முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வேல்முருகன் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர், ஒன்றிய கவுன்சிலர் அப்துல்கரீம் , ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் இசக்கி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பட்டுராஜா, இளைஞரணி கிளை செயலாளர் இப்ராகீம், புளியங்குளம் முருகேசன், ஐயப்பன், முருகன் உலக நாதன், முத்து பலவேசம், முத்துச்சாமி, ராமகிருஷ்ணன், சுயம்புலிங்கம், உள்படபலர் கலந்துகொண்டனர்.
&&&