கருங்குளம் அருகே புளியங்குளத்தில் பள்ளிமாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஊர் பிரமுகர் மணி தலைமை வகித்தார். ரினி பவுண்டேசன் இயக்குனர் செலின் ஜார்ஜ் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் மரியராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.. இதில் உள்ளூர் பள்ளி மற்றும் வெளியூரில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் ,எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. சித்தார்த் நன்றி கூறினார்.


