செய்துங்கநல்லூர் பஜாரில் பிளாஸ்டிக் பொருள் வைத்திருப்பவர்களுக்கு உதவி திட்ட அலுவலர் அபராதம் விதித்தார்.
செய்துங்கநல்லூரில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தேவிகா தலைமையில் அலுவலர்கள் கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒன்றிய ஆணையாளர் வெங்கிடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, பஞ்சாயத்து செயலர் சங்கரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருப்போருக்கு அபராதம் விதித்தனர். இதில் ரூபாய் 6 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, செய்துங்கநல்லூரில் சந்தை உள்பட பல வியாபார தலங்கள் உள்ளன. இந்த தலங்களில் பிளாஸ்டிக்பொருள் அதிகமாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. எனவே இந்த அதிரடி சோதனை நடத்தினோம். இதில் ஒரு நாளில் 6 ஆயிரம் அபதாரம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என வியபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


