கருங்குளம் அருகே புளியங்குளத்தில் உடைந்து விழத்துடிக்கும் நியாயவிலைகடையால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
கருங்குளம் பஞ்சாயத்து புளியங்குளத்தில் நியாய விலை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் சுமார் 450 கார்டு உள்ளது. இவர்களுக்கு பொருள்களை விநியோகம் செய்ய கடந்த 1998 ஆம் ஆண்டு புதிய ரேசன் கடை கட்டிகொடுக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பழுதாகி விட்டது. இந்த கட்டித்தில் உள்ள மேற்கூரைகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளது . இந்த கட்டித்தில் தற்போது நியாய விலை கடை நடத்த இயலாமல் அருகில் உள்ள கட்டிடத்தில் வைத்து உள்ளார்கள். தற்போது இந்தகட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த மணி கூறும் போது, எங்கள் ஊரில் கட்டப்பட்ட ரேசன் கடை மிகவும் பழுதாகி விட்டது. புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று பல முறை கேள்வி கேட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது இந்த கட்டிடம் சரியில்லாத காரணத்தினால் கடையை அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் மாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டிதரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த கட்டிடத்தினை உடனே கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


