கருங்குளம் ஒன்றியத்தில் 116 குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி வழி கட்டுதலின் பேரில் நடந்த இந்த கணக்கெடுப்பு பணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழு மேற்பார்வையிட்டனர். கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 116 குடியிருப்புப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் மூலமாக கணக்கெடுப்புப் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 21 ந்தேதி முதல் வருகிற 10 ந்தேதி வரை நடைபெறும் இக்கணக்கெடுப்பில் 6 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லாக் குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்வியின் அவசியம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மூலம் கல்வி தன்னார்வலர்கள் கொண்டு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் புஷ்பா ஹெப்சி பாய் தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.