15 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடாதது ஏன் என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
தூத்துக்குடி மாவட்டம் , ஆதிச்சநலலூர் சிவகளை ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழாய்வை தொடர்து நடத்தவும், ஏற்கனவே நடந்திய ஆய்வின்முடிவுகளளை வெளியிடக்கோரியும் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே போல் தமிழர்களின் பண்டைய நாகரிகம் தொடர்பாக கீழடி மற்றும் தமிழகத்தின் பல வேறு பகுதிகளில் தொல்லியல் அகழாய்வை தொடர உத்தர விட«ண்டும் என்று ராஜேந்திரன், நாராயண மூர்த்தி உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற் று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தமிழக தொல்லியல் துறையில் காலிப்பணியிடங்களை நிரம்பும் பொருட்டு. டி.என்.பி.சி. மூலம் தகுதியான வர்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில் அந்தபணிகளுக்கு உரியவர்களை நியமிப்போம். ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி கிடைத்தததும் விரைவில் பணிகள் தொடங்கும் அதேபோல் தற்போது கீழடியில் 6 ம் கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ளது. எனவே அங்கு நடத்தப்பட்ட 5 மற்றும் மற்றும் 6 ம் கட்ட அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
அப்போது நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஏன் வெளியிடவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வு நடந்தும் ஒரு ஆய்வின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளீர்கள். மற்ற இடங்களில் நடந்த ஆய்வின் முடிவு அறிக்கைகள் என்ன ஆனது, அவற்றின் தற்போதைய நிலை என்ன, எப்போது அறிக்கை வெளியிடப்படும், தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூருவில் மட்டுமே உள்ளது, ஏன் அதன் கிளையை சென்னையில் தொடங்கக்கூடாது, பொருந்தல், கொடுமணல் ஆகியவை கி.மு.500 ஆண்டுக்கு முந்தையது என்றும், ஆதிச்சநல்லூர் கி.மு.580 ஆண்டுக்கு முந்தையது என்றும் தெரிகிறது. குறிப்பாக அசோகர் காலத்திற்கு முந்தையது என்பதும் புலனாகிறது” என்றனர்.
பின்னர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகளை தொடங்க, மத்திய தொல்லியல்துறையின் அனுமதி எப்போது கிடைக்கும், தமிழகத்தில் ஏன் முழுமையாக மத்திய தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


