செய்துங்கநல்லூரில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருங்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வே. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.பி.எஸ், ஜெயகுமார், பஞ்சாயத்து தலைவவர் சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாய் கவுன்சிலர் தியாகராஜன், மாவட்டசெயலாளர் பெரியபெருமாள், மாவட்ட செயலாளர் குழந்தை ஆழ்வார், கந்த கோனார், முத்துபாண்டி, சீனி, தர்மன் ,பொன் சடகோபாலன், கவிஞர் பூவிழி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றி வேல், நிலமுடையான், சவுந்திரபாண்டியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.