உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி அகழாய்வு பணியானது தொடங்கியது. இந்த அகழாய்வு அகழாய்வு இயககுனர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் நடந்துவருகிறது. இந்தப் பணியானது செப்படம்பர் மாதம் இறுதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ல் 10 ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களும், இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை செய்ய மத்திய தொல்லியல் துறையினர் 28 லட்சம் ஒதுககீடு செய்து பணி நடைபெறுகிறது. அகழாய்வு பணியில் 72 குழிகள் தோண்டப்பட்டு தற்போது வரை 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பிராமி எழுத்துக்களும் முதுமக்கள் தாழிகளும் எலும்புகளும் இரும்பு கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக கால்வாய் செல்லும் பாதையில் ரயில்வே கேட் அருகில் உள்ள பனங்காட்டு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அந்த அகழாய்வு பணியில் சுமார் 2 அடி தோண்டிய போது அதில் 2 முதல் 3 வயது வரை மதிக்கத்தக்க குழந்தையின் எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும் போது இதன் காலம் தெரிய வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எலும்பு கூடு தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடியில் தெரியும் காரணத்தினால் பிற்காலத்தில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார். இதன் அருகில் தோண்டிய குழியில் தான் தமிழ் பிராமி எழுத்து க்கள் கொண்ட பானை யோடுகள் கிடைத்துள்ளது. சுமார் சுமார் 8 அடிக்கு கீழே கிடைத்துள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை பெரும்பாலான எலும்புகூடுகள் முதுமக்கள் தாழிக்குள்ளே புதைக்கப்படுவது வழககம். எனவே படுத்த நிலையில் கிடைத்த இந்த எலும்பு கூடு பிற்காலத்தினை சேர்ந்தாகத்தான் இருக்கும் என ஆதிச்சநல்லூர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.