முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் மற்றும் இளைஞர் அணி சார்பில் போலையர்புரத்தில் ஏழைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன் தலைமையேற்று ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்திரகாசி,டி.எஸ்.எஸ்.பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் ரெனிஸ் வரவேற்புரை ஏற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி நிர்வாகி சோமசுந்தரி, அரசூர் ஊராட்சி செயலர் ராஜபாண்டியன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் டேவிட் வேதராஜ், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி செயலாளர் அந்தோணிஜெயசீலன், ஒன்றிய பிரதிநிதி செல்வன், சிறுபான்மையினர் அணி டேனியல் ராஜன், ஆதிதிராவிடர் அணி ஜெகநாதன், ஊராட்சி செயலாளர் ரத்தினராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபு ராஜா, அந்தோணி, விக்னேஷ், தினகரன், ஜார்ஜ்ஆசீர் மற்றும் ஆனந்தபாபு, மற்றும் கிளை செயலாளர்கள் அப்துல் ரகுமான், மிக்கேல் சுந்தர்ராஜ், சித்திரை பிரபு, சாலமன், முருகராஜ், சிவபாலன், சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர் முருகேசன் நன்றி உரை ஆற்றினார்.


