தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கருங்குளம் வட்டார கிளை சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருங்குளத்தில் உள்ள கருங்குளம் வட்டார உதவிதொடக்க கல்வி அலுவலம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் எபசேனர் தலைமை வகித்தார். துணை தலைவர் வேலாயுதம் வரவேற்றார். வட்டார செயலாளர் லூயிஸ் பூபாலராயன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட செலயாளர் முத்தையா வாழ்த்தி பேசினார். உபரி ஆசிரியர்கள் அங்கன் வாடி ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது உள்பட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார பொருளாளர் சக்தி நன்றி கூறினார்.
;