ஆதிச்சநல்லூர் வழக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் நடத்திய வழக்கறிஞர் டாக்டர் அழகு மணிக்கு செய்துங்கநல்லூரில் பாராட்டு விழா நடந்தது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மிகவும் பழமை வாய்ந்தது. ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ல் அகழாய்வு நடந்தது. ஆனால் ஆய்வு அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இதனால் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கை வேண்டும். மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யவேண்டும். இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி மதுரை ஐகோர்டில் மனுதாரர் சார்பில் வாதாடினார். தற்போது இங்கு மறு அகழாய்வு செய்ய மாநில அரசும் , அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. மேலும் அகழாய்வு அறிக்கை ஒரிரு மாதத்தில் வெளியிடப்படும் என கூறியுள்ளனர். இதுபோலவே இவர்களின் மற்றொரு வழக்கான சிவகளையும் அகழாய்வு செய்யவேண்டும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 அகழாய்வு இடங்களை தேர்வு செய்து அதையும் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தனர். மத்திய அரசு அதற்கும் ஆணை பிறபித்து அகழாய்வு செய்ய உத்தரவு வழங்கி விட்டது.
இவ்வேளையில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி ஆதிச்சநல்லூர் பரம்புக்கு வருகை வந்தார். அவருக்கு செய்துங்கநல்லூரில் வைத்து தமிழ் ஆர்வலர்கள் வரவேற்று பொன்னாடைபோர்த்தி கௌரவித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். செய்துங்கநல்லூரி சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஆவுடையப்பன் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து, உள்பட பலர் கலந்துகொண்டனர்.


