ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு அகழாய்வு செய்ய உள்ளது. ஆதிச்சநல்லூர் பரம்பு 114 ஏக்கர். இந்த எல்கை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்துக்கு சொந்தமான இந்த இடம் ஆதிச்சநல்லூர் , கருங்குளம், கால்வாய் பஞ்சாயத்துகளில் உள்ளடங்குகிறது. இந்த பஞ்சாயத்துகளின் கிராமசபை கூட்டத்தில் அகழாய்வுக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுவுக்கு நன்றி கூறியும், அதற்கு வேண்டிய உதவிகளை செய்வதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருங்குளம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். துணைதலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பற்றாளராக கருங்குளம் ஒன்றிய உதவியாளர் கவிதா பிரியதர்ஷினி கலந்துகொண்டார். கருங்குளம் பஞ்சாயத்து எழுத்தர் சோமு தீர்மானங்களை வாசித்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வை தமிழக அரசு முன்னின்று நடத்திய வகைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலை, பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆண்டாள், சித்ரா, வள்ளியம்மாள், அரிச்சந்திரன், கோமதி சுந்தரி, இசக்கியம்மாள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
கால்வாய் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் மீனா முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் காசி தீர்மானங்களை வாசித்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படடது. பற்றாளராக பொறியாளர் சித்திரை சேகர் கலந்துகொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் ஆதிச்சநல்லூர் கிராம சபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர்கணேஷ் தலைமை வகித்த்£ர். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் சிவசுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வை துவக்க உள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பற்றாளராக எழுத்தர் குணசெல்வி கலந்துகொண்டார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் ஆதிச்சநல்லூர் , சிவகளை மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு தமிழக அரசு செய்ய உள்ளது. எனவே மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.