
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்கிர பா தீஸ்வரர் ஆன்மிக பேரரவை சார்பில் பாராட்டு நடந்தது.
செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத ஸ்ரீபதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆலயம் 1000 வருடம் பழமையானது இதற்கான கல்வெட்டுகள் கோயிலில் உள்ளது. திருப்பணி இன்றி கிடந்த இந்த கோயிலை ஆன்மிக பேரரவை திருப்பணிக்கு கொண்டு வந்து தற்போது வருஷாபிசேகம் நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தினை பற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த செவ்வாய்கிழமை 03.12.2019 அன்று தினத்தந்தி ஆன்மிக இதழில் கட்டுரை எழுதியிருந்தார். இதை வெளியிட்ட தினத்தந்தி இதழை பாராட்டியும், எழுத்தாளரை பாராட்டியும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆன்மிக பேரரவையினர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணி அய்யா, குரு மாரியப்பன் அய்யா, ஞானவேல், ஆறுமுகநயினார், மாரிமுத்து, ஆறுமுகபெருமாள், இசக்கி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.