செய்துங்கநல்லூர் கஸ்பா வேளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பேச்சியம்மாள் 9 வது வகுப்பும், மாசனபேச்சி 7 வது வகுப்பும் படித்து வருகி£ர். சுப்பிரமணியன் கூலி தொழிலாளி. இதற்கிடையில் கிருஷ்ணவேணிக்கு அடிக்கடி உடலில் பிரச்சனை ஏற்பட்டது. டாக்டரிடம் காட்டிய போது மண்ணீரல் வீங்கி உள்ளதாகவும், அதை சீர் செய்ய 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவு ஆகும் கூறினார்கள். மேலும் முதல் கட்டமாக பாயஸ்பின் என்னும் ஒரு டெஸ்ட் உள்ளது. அது சென்னையில் குலோபல் மருத்துவமனையில் தான் உள்ளது. எனவே சுப்பிரமணி உடனே சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். ஆனால் அதற்கான பணத்தினை சுப்பிரமணியனால் புரட்ட முடியவில்லை. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சை செய்ய வழியில்லை. அரசு காப்பீட்டு திட்டம் மூலமாகவும் இந்த நோயை சிகிச்சை செய்ய வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனால் கிருஷ்ண வேணி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். சுப்பிரமணி உழைப்பில் தான் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. தற்போது அவர் தனது மனைவியை கூட்டிக்கு கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்த காரணத்தினால் குழந்தைகள் படிப்பும் எதிர்காலமும் கேள்வி குறியாக உள்ளது. எனவே கிருஷ்ணவேணிக்கு உதவ விரும்புவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 9952739310,8760296826