ஆழிகுடி ஆர்.சி. துவக்கப்பள்ளியில் கடந்த 37 வருடம் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியவர் துரைப்பாண்டியன். இவர் தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். அவரின் பிரிவு உபச்சார விழா பள்ளியில் நடந்தது. சமூக சேவகர் செல்வ அந்தோணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெஸி சிறப்பரையாற்றினார். ஆசிரியர் லூயிஸ் வரவேற்றார். ஆசிரியை ரஞ்சிதா, பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சார்பாக பாராட்டு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற அண்ணன் கவிஞர் ஆழிகுடி துரைப்பாண்டியன் ஏற்புரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.