
செய்துங்கநல்லூரில் உள்ள எஸ்.என்.பட்டியில் மலைபாம்பு பிடிபட்டது. செய்துங்கநல்லூர் அருகில் உள்ள எஸ்.என்.பட்டியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் ஊர் அருகில் உள்ள வாய்க்காலில் மீன் பிடிக்க தூண்டில் போட்டு வைத்திருந்தார். அதில் மலைபாம்பு ஒன்று பிடிப்பட்டது. இதுகுறித்து விவசாய சங்க தலைவர் குமாரிடம் இவ்வூர் சேர்ந்த வசந்த் தகவல் தெரிவித்தார். அவர் வனத்துறை மூலமாக ஊழியர்களுடன் வந்து மலை பாம்பை அவர்களிடம் ஒப்படைத்தார். வல்லநாடு மலையில் இந்த மலைபாம்பு விடப்பட்டது.