செய்துங்கநல்லூரில் உள்ள கண்ணம்மாள் என்னும் புனித பிரகாசியம்மாள் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடந்தது. கடந்த 6 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவையட்டி மாலை 5 மணிக்கு ஜெபமால 6 மணிக்கு கொடி பவனி தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அதன் பின் மன்றாட்டு மாலை திருப்பலி நடந்தது. புளியம்பட்டி பங்குதந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார். அதன் பின் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை , மன்றாட்டு மாலை நற்கருணை ஆசீர், திருப்பலி நடந்தது. அதில் பங்கு தந்தை ஆரோக்கிய லாசர் கலந்துகொண்டு திருப்பலி நடத்தினார். 13 ந்தேதி 6 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் மறையுரை நடந்தது. பொது நிலையினர் பணியகம் இயக்குனர் பென்சிகா லூகன் மறையுரையாற்றினார். 14 ந்தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நற்கருணை ஆசீர் நடந்தது. திருவைகுண்டம் பங்குதந்தை மரியவளன் கலந்துகொண்டு மறையுரை நிகழ்த்தினார். 15 ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி நடந்தது. பாளையம் செட்டிகுளம் பங்குதந்தை அந்தோணி ராஜ் திருப்பலியை நடத்தினார் . அதன் பின் சப்பர பவனி நடந்தது. செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடந்தது. மிளகு பூ, வெள்ளியால் ஆன நேமித பொருள்களை பிரகாசியம்மாளுக்கு மக்கள் வழங்கி வணங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியம் தலைமையில அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.