கருங்குளம் ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சியில் நேற்று கன மழை பெய்தது. இதில் ஊராட்சியில் பல பகுதியில் தெருவிளக்கு எரியாமல் போய் விட்டது. மேலும் இந்த ஊரில் உள்ள பல இடங்களில் தெருவிளக்குகள் சேதமடைந்தனர். முதல் கட்டமாக ஆழிகுடி காமராஜர் தெருவில் சேதமடைந்த தெருவிளக்குகளை மாற்றும் பணியைப் பஞ்சாயத்துத் தலைவர் முருகேஸ்வரி தினேஷ் ஈடுபட்டார். இதனால் உடனடியாக தெருவிளக்குகள் எரிந்தன. இதனால் இப்பகுதி மக்கள் ஆழிகுடி பஞ்சாயத்துத் தலைவர் முருகேஸ்வரி தினேஷை பாராட்டினர். தொடர்ந்து பஞ்சாயத்துகளில் மற்ற இடங்களிலும் தெருவிளக்கு சீரமைப்பு பணி நடைபெறுகிறது. மேலும் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.



Congratulations