செய்துங்கநல்லூர் நூலகத்தில் நூலக வாரவிழா நடந்தது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலகர் ரெங்க நாயகி கலந்துகொண்டார். திருககுறள் ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுககு பரிசு வழங்கப்பட்டது. ராமசந்திரன் என்பவர் நூலக புரவலராக சேர்ந்தார். 50 உறுப்பினர்கள் புதிதாக சேர்ககப்பட்டனர். சிறந்த வாசகராக சுடலை மாரி தேர்ந்தெடுககப்பட்டு அவர்களுககு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , வாசகர் வட்ட முன்னால் தலைவர் ஜுவா, காளிமுத்து, நூலகர்கள் பாலமுருகன், தளவாய் உள்பட பலர்கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை வாசகர் வட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நூலகர் லெட்சுமணகுமார் நன்றி கூறினார்.


