கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் கூட்ட முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் திருமதி கோமதி ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பாக்கிய லீலாவதி அவர்கள் முன்னிலை வகித்தார். மகளிர் உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 ஊராட்சியை சேர்ந்த 320 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 126 பேருக்கு பயிற்சியில் சேருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை வட்டார வாழ்வாதார மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


