குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் வருகை தந்த தருமை புரம் ஆதினம் வரும் வழியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அவர் பெருங்குளம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பகுதியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். செய்துங்கநல்லூரில் சைவ வேளாளர் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செயலாளர் செல்வம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நாட்டார் குளம் எஸ்.கே. திருப்பதி, அய்யனார் குளம் பட்டி பெருமாள் உள்படப் பலர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு தருமை புரம் ஆதினம் அருளாசி வழங்கினார்.


