வல்லநாடு சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. வல்லநாட்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆண்டு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குக் குரு இடம் பெயர் கிறார். இதனை முன்னிட்டு இந்தக் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் குருபகவானுக்கு பூஜைகள் நடந்தன. வல்லநாடு மற்றும் சுற்று கிராம மக்கள் திரளாக வந்திருந்து குருபகவானைத் தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சண்முகசுந்தரம் பட்டர் மற்றும் சந்தோஷ் பட்டர் செய்திருந்தனர்


