தாமிரபரணியின் 7வது அணைக்கட்டு மருதூர் அணை. இந்த அணையில் சுமார் 4000 அடி நீளமானது. பாம்பணை என வழங்கப்படும் இந்த அணை மிகவும் பிரசித்தி பெற்றது. மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலமாக சுமார் 26 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் இந்த அணையின் மூலமாகத்தான் சாத்தான்குளம் பகுதியில் உள்ள சடையனேரி கால்வாயிககு தண்ணீர் செல்கிறது. இந்த அணைக்கட்டு தற்போது நிரம்பி விழுகிறது. இந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். பார்ப்பவர்களைப் பரவசமடையச் செய்யும் இந்த அணையைப் பார்வையாளர்கள் சந்தோஷத்துடன் பார்த்து மகிழுகிறார்கள்.


