தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் “100 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்” வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் 12 ஊரக வளர்ச்சி ஒன்றிய பகுதிகளிலும் “100 மழைக்கால சிறப்பு முகாம்” நடைபெற இருக்கின்றன. இதற்கான மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.மேலும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியினையும் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்படும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மழைநீர் புகுந்த இடங்களிலும், மழைநீர் வடிந்த இடங்களிலும் வரும் நாட்களில் தொற்று நோய்களை தடுக்க பன்முக நடவடிக்கைகளின் தொடர்ச்சிகளாக மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருவதற்கு மற்றும் விழிப்புண்வை ஏற்படுத்தும் வகையிலும், நமது மாவட்டத்தில் இன்று முதல் (13.11.2021) தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் 12 ஊரக வளர்ச்சி ஒன்றிய பகுதிகளிலும் “100 மழைகால சிறப்பு முகாம்” அமைத்திட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து இன்று அந்த நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.
பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்செழியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


