செய்துங்கநல்லூரில் பேருந்து பயணிகளுக்கு போலி சார் கொரோனா விழிப்புணர்வு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா சுந்தர் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் ரவிசந்திரன், கருத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருந்தில் செல்லும் பயணிகளிடம்,பேருந்து ஏற காத்து நின்ற பொதுமக்களிடமும் கொரானா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்.
செய்துங்கநல்லூர் சுகாதாரத்துறை ஆய்வாளர் சண்முகப்பெருமாள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.


