செய்துங்கநல்லூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வர மகாலில் நடந்த இந்த முகாமிற்கு வியாபாரிகள் வர்த்தக சங்கத் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் ஆய்வாளர் ராஜ சுந்தர், சப் இன்ஸ்பெக்டர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். ஸ்ரீ வைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் வல்ல நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை சேர்ந்த வட்டார மருத்துவர் மு. சுந்தரி தலைமையில் மருத்துவர்கள் கருங்குளம் கிருஷ்ணவேணி, வல்ல நாடு பிலிப் பாஸ்கர், கிஷோர் கோவிந்த ராஜ், ரிச் எவர்கிளின் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார் வெங்கடேசன், செய்துங்கநல்லூர் சுகாதார ஆய்வாளர் சண்முக பெருமாள், கிராம சுகாதார செவிலியர்கள் விவேகானந்த விஜயா, மீனாட்சி, காந்தி, மைதிலி, சுஜாதா, முத்து லெட்சுமி, மாலதி, ஜெமிலா ஆகிய குழுவினர் தடுப்பூசியைச் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் உதவி மின் பொறியாளர் மகேஷ்குமார், வியாபாரிகள் சங்கத்தினை சேர்ந்த செயலாளர் பிச்சை பூபாலராயன், பொருளாளர் பால்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் சுடலைமணி, சுவீட் கணேசன், முருகன் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.