மேலஆழ்வார்தோப்பு கிளை கிராம உதயம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கருங்குளம் பகுதியில் நடந்தது.
வல்ல குளத்தில் நடந்த முகாமிற்கு மைய தலைவி ஜெயலலிதா தலைமை வகித்தார். குழு தலைவி பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார் தன்னார்வ தொண்டர் விஜய ஏஞ்சல் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கி கபசுர குடிநீர் வழங்கினார். சாந்தி நன்றி கூறினார்.
அரசர் குளத்தில் நடந்த முகாமிற்கு மைய தலைவி செல்வி தலைமை வகித்தார். குழு தலைவி மணிமேகலா, முன்னிலை வகித்தார் தன்னார்வ தொண்டர் விஜய ஏஞ்சல் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கி கபசுர குடிநீர் வழங்கினார். வளர்மதி நன்றி கூறினார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள பற்ப நாத புரத்தில் நடந்த முகாமிற்கு மைய தலைவி செல்வி தலைமை வகித்தார். குழு தலைவி ஜெபமணி ராஜம்மாள் முன்னிலை வகித்தார் தன்னார்வ தொண்டர் விஜய ஏஞ்சல் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கி கபசுர குடிநீர் வழங்கினார். சலோமி ரோஜா நன்றி கூறினார்.