வ.உ.சி. இலக்கிய வானம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது. பழைய பேட்டை நிவேதிதா மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிக்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநிலத் துணை தலைவர் நல்லாசிரியர் வேணுகோபால் தலைமை வகித்தார். கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன், வண்ணார்பேட்டை ஜெயராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் நல்லாசிரியர் மூ. சுடலை துவக்கி வைத்தார். எழுத்தாளர் ஜோல்னா ஜவகர் தொடக்கவுரையாற்றினார். சிற்றம்பலம் வரவேற்றார். தமிழச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். பேச்சுப்போட்டியில் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் முதல் பரிசை கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரியை சேர்ந்த தில்லை பொன் சித்திராவும், இரண்டாவது பரிசை பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரியை சேர்ந்த ராஜலெட்சுமியும் பெற்றனர். பள்ளிகளுக்கான போட்டியில் மகராஜ நகர் ஜெயந்திரா பள்ளியை சேர்ந்த வினிதாவும், இரண்டாம் பரிசை சங்கர்நகர் ஜெயந்திரா பள்ளியைசேர்ந்த செந்திலும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் காஜாமுகைதீன், சூரிய நாராயணன், காமாட்சி நாதன், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோல்னா ஜவகர், ராகவேந்திரான, விஸ்வா உள்பட வ.உ.சி. இலக்கிய வானத்தினர் செய்திருந்தனர்.


