
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சட்டமன்ற தொகுதிக்கு பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சவின் பன்சால் ஐஏஎஸ் வருகை.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தலை சுமுகமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறுவதற்காக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த அதிகாரிகளின் ஒருவரான சவின்பன்சால் இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகா மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனைகள் வழங்கி தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.