எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் ஸ்ரீ வைகுண்டம் டூடே நீயூஸ் புதுப்பொலிவுடன் பயணிக்கிறது. 92 நாடுகளைச் சேர்ந்த 1லட்சத்து 23 ஆயிரத்து 500 வாசகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 35 வருடங்களாக எழுத்து துறையில் பயணித்து வருகிறார். இதுவரை 53 நூல்களை எழுதியுள்ளார். தாமிரபரணி , மேற்குத் தொடர்ச்சி மலை, சித்தர்கள், ஜமீன்தார்கள், ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்பட அகழாய்வு சம்பந்தப்பட்ட நூல்கள், களரி ஆய்வு போன்று பல ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். விகடன், தினத்தந்தி, சூரியன் பதிப்பகம், தாமரை மீடியா, தி தமிழ் திசை இந்து, காவ்யா, பொன்சொர்ணா,சைவசித்தாந்த நூல் பதிப்பு கழகம் உள்பட பல்வேறு முன்னணி பதிப்பகங்களில் இவர் நூல்களை எழுதி வருகிறார். கடந்த வருடம் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது கிடைத்துள்ளது. மேலும் இவர் ஸ்ரீ வைகுண்டம் டூடே நியூஸ் என்ற பெயரில் ஸ்ரீ வைகுண்டம் தொகுதி செய்திகளை வெளியிட்டு ஸ்ரீ வைகுண்டம் டூடே நியூஸை வெப்சைட் மூலமாக வெளியிட்டு வருகிறார். இதற்கு உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக 92 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 23 ஆயிரத்து 500 பேர் இந்த வெப் சைட்யை பார்த்துள்ளார்கள். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தொடர்கள், முக்கிய நிகழ்வுகளைப் பதிவேற்றம் செய்த வாசகர் பார்வைக்குக் கொண்டு வருகிறார். அவருடைய நூல்கள், அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. இணையத்தளம் மூலம் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வெப்சைட்யை காட்சான் நிறுவனத்தின் சார்பில் ராஜாராம் வடிவமைத்துள்ளார்.
இந்த வெப்சைட் செய்தி ஆசிரியராக அபிஷ் விக்னேஷ் அவர்களும், சிறப்புச் செய்தியாளராகச் சுடலை மணி செல்வன், செய்தியாளராக கோபால் , சிதம்பரம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். மேலும் செய்திகளை வாசகர்களும் தரலாம். அதுவும் இந்த இணையத்தளத்தில் ஏற்றப்படும்.
தொடர்ந்து ஆதரவு தரும் வாசர்களுக்கு நன்றி. இந்த வெற்றி உங்களால் ஏற்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்துக்குத் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


