தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இளம்புயல் கிரிக்கெட் குழு சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார். போட்டியில் வென்ற அணியினருக்கு எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தனது சொந்த செலவில் 15,000 ரூபாய் பணம் மற்றும் சுழற்கோப்பை ஆகியவற்றை வழங்கினார். இந்த போட்டியில் இளம்புயல் அணி முதல் பரிசையும், நைனார்பத்து அணி இரண்டாம் பரிசையும், புன்னக்காயல் அணி மூன்றாம் பரிசையும், இளம்புயல் பி அணி நான்காம் பரிசையும் தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பரிசு வழங்கினார். மேலும் சிறந்த ஆட்டக்காரருக்காண சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அணியினர் பங்கு பெற்றனர்.


