மருதூர் கீழக்கால் வடவல்லநாடு பஞ்சாயத்துக்கு உள்பட்ட பாசன பரப்பில் சுமார் 25 ஏக்கரில் நாற்று நடும் பணி கடந்த 1 மாதத்துக்கு முன்பு நடந்தது. இந்த பணியினால் நடப்பட்ட நாற்றுகள் தற்போது வளர்ந்து வந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மருதூர் கீழக்காலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் தண்ணீர் வயல்வெளிக்குள் புகுந்தது. தொடர்ந்து தண்ணீர் வற்றாமல் சென்ற காரணத்தினாலும், காட்டு பகுதியில் இருந்து இப்பகுதிக்குதொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருந்ததாலும் இங்கு நட்ட நாற்றுகள் தண்ணீருக்குள் கடந்த 1 வாரமாக நிற்கிறது. இதனால் பயிர் அழுகி விட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பயிர்களை பாதுகாக்கவும், அழிந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கவேண்டும் என விவசாயி சௌந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


