ஒட்டபிடாரம் இடைத்தேர்தலையொட்டி செய்துங்க நல்லூரில் வாகன சோதனையை போலிசார் நடத்தினர். அதில் நேற்று இரவு 12 மணிக்கு 3 லட்சம் பிடிபட்டது.
ஒட்டபிடாரத்தில் இடை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்தது வருகிறது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி. கோவில் பத்து உள்பட 21 பஞ்சாயத்து கருங்குளம் ஒன்றியத்துக்குள் ஒட்டபிடாரம் தொகுதி எல்கை உள்ளது. எனவே இந்த பஞ்சாயத்து சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி செய்துங்கநல்லூர் வந்து செல்கின்றனர். எனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசில்தார் நாக சுப்பிரமணியன் தலைமையில் சப்.இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து, தலைமை காவலர் ஜோதி கிருஷ்ணன், அகிலா மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். நேற்று இரவு 12 மணிக்கு ஆலங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் பேரூக்கு ஒரு காரில் காசிபாண்டியன் மகன் பிரவீன்(27) என்பவர் வருகிறார். இவரது காரை சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் 3லட்ச ரூபாய் இருந்தது. இதை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரிடம் ஒப்படைத்தார்.


