சாத்தான்குளம் அருகே குளத்தில் குளிக்க சென்ற போது தலைகீழாக குதித்ததில் இளைஞர் உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மகன் அதிபன் (25).அதே தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ரத்தினகுரு (25).இவர்களிருவரும் நண்பர்கள். இதில் அதிபனுக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தை ரத்தின குரு ஓட்டி வருகிறாராம்.நேற்றிரவு இருவரும் மது அருந்திவிட்டு அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.நீண்ட நேரம் ஆகியும் அவர்களிருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த இருவர் வீட்டாரும் தேடியதில் கிணற்றுக்குள் தலையில் படுகாயம் அடைந்து அதிபன் இறந்தார்.
மேலும் படுகாயத்துடன் ரத்தினகுரு உயிருக்கு போராடி வருகின்றனர். தொடர்ந்து இறந்த அதிபனை சிகிச்சைக்கும்,ரத்தினகுரு சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அதிபனின் உறவினர்களோ அவரை வேண்டுமென்றே கொன்று விட்டதாக குற்றம் சாட்டினர்.ரத்தினகுரு போலீசில் கூறும் போது,கிணற்றில் டைவ் அடித்து குளித்ததில் தலையில் பாறை பட்டதில் அதிபன் உயிரிழந்ததாகவும் தாம் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.


